Sarva Praharanayuthan

One who uses everything as his weapon!

சிவன் கோவில்களில் அனைத்து தெய்வங்களுக்கும் சொல்ல மந்திரங்கள்

Sivan temple

சிவன் கோவில்களுக்குச் செல்லும் போது அங்கிருக்கும் அனைத்து சன்னதிகளிலும் வீற்றிருக்கும் தெய்வங்களையும் வெறுமனே கைகூப்பி கும்பிட்டு வராமல் அந்தந்த தெய்வங்களுக்கான எளிய ஸ்லோகங்களைச் சொல்லி வழிபடுவது சிறப்பானதாகும்.

விநாயகர் ஸ்துதி

  1. ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
    இந்தின் இளம்பிறைபோலும் எயிற்றனை
    நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
    புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே
  2. வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
    நோக்குண்டாம் மேனி நுடங்காது – பூக்கொண்டு
    துப்பார் திருமேனித் தும்பிக்கை யான்பாதம்
    தப்பாமற் சார்வார் தமக்கு

முருகர் ஸ்துதி

  1. அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்
    வெஞ்சமரில் அஞ்சேல் எனவேல்—நெஞ்சில்
    ஒன்குகன் போந்து இருக்குமாகில் அடியவருக்கு
    எண்குணமும் உண்டாம் இடர்.
  2. ஏறுமயில் ஏறி விளையாடு முகம் ஒன்றே!
    ஈசருடன் ஞானமொழி பேசு முகம் ஒன்றே!
    கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே!
    குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே!
    மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே!
    வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே!
    ஆறுமுகம் ஆன பொருள் நீ! அருள வேண்டும்!
    ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!
  3. வந்த வினையும் வருகின்ற வல்வினையும்
    கந்தன் என்ற சொல்லக் கலங்கிடுமே
    செந்தில் நகர் சேவகா என்று திருநீறு அணிவார்க்கு
    மேவ வாராதே வினை.

அதிகார நந்தி ஸ்துதி

  1. அங்கணன் கயிலை காக்கும் அகம்படித் தொழின்மை பூண்டு
    நங்குரு மரபிற் கெல்லாம் முதற்குரு நாதனாகிப்
    பங்கயந் துளவம் நாறும் வேத்திரப் படைபொ றுத்த
    செங்கைஎம் பெருமான் நந்தி சீரடிக் கமலம் போற்றி!

சூரிய பகவான் ஸ்துதி

  1. ஜபாகுஸும ஸங்காஶம் காஶ்யபேயம் மஹாத்யுதிம்
    தமோரிம் ஸர்வ பாபக்நம் ப்ரணதோஸ்மி திவாகரம்

சிவபெருமான் ஸ்துதி

  1. ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம்
    உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர்முக்ஷீய மாம்ருதாத்
  2. மண்ணின்நல் லவண்ணம்
    வாழலாம் வைகலும்
    எண்ணின்நல் லகதிக்கி
    யாதுமோர் குறைவிலைக்
    கண்ணின்நல் லஃதுறுங்
    கழுமல வளநகர்ப்
    பெண்ணின்நல் லாளொடும்
    பெருந்தகை யிருந்ததே.
  3. வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
    மிகநல்ல வீணை தடவி
    மாசறு திங்கள் கங்கை முடிமேலணிந்தென்
    உளமே புகுந்த அதனால்
    ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி
    சனிபாம்பி ரண்டு முடனே
    ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல
    அடியா ரவர்க்கு மிகவே.

நடராஜர் ஸ்துதி

  1. ஸதஞ்சித முதஞ்சித நிகுஞ்சிதபதம் ஜலஜலஞ்சலித மஞ்ஜு கடகம்
    பதஞ்ஜலி த்ருகஞ்ஜனம் அனஞ்சனம் அசஞ்சலபதம் ஜனன பஞ்சனகரம்
    கதம்பருசிம் அம்பரவஸம் பரமம் அம்புத கதம்பகவிடம்பககலம்
    சிதம்புதிமணிம் புதஹ்ருதம்புஜ ரவிம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜ

நால்வர் ஸ்துதி

  1. பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல்போற்றி
    ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்தபிரான் அடிபோற்றி
    வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம்போற்றி
    ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி

லிங்கோத்பவர் ஸ்துதி

  1. ஓம் நமோ நமஸ்தே கிரிஜேஷாய
    நமோ நமஸ்தே வ்ருஷபத்வஜாய
    நமோ நமஸ்தேஹி குணாத்மகாய
    நமோ நமஸ்தே லிங்கோத்பவாய ச்வயம் புவே

கஜலக்ஷ்மி ஸ்துதி

  1. சதுர்ப் புஜாம் த்விநேத்ராஞ்ச
    வராபய கராந் விதாம்
    அப்ஜத்வய கராம்போஜாம்
    அம்புஜா சநஸமஸ்த்திதாம்
    ஸஸிவர்ண கடேபாப் யாம்
    ப்லாவ்யமானாம் மஹாச்ரியம்
    சர்வாபரண சோபாட்யாம்
    சுப்ரவஸ்த் ரோத்தரீயகாம்
    சாமரக்ரஹ நாரீபி :
    ஸேவிதாம் பார்ச்வயோர்த்வயோ :
    ஆபாதலம்பி வசநாம்
    கரண்ட மகுடாம் பஜே.

சரஸ்வதி ஸ்துதி

  1. சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
    வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர் பவது மே சதா.
  2. வெண் தாமரைக்கு அன்றி நின் பதம் தாங்க என் வெள்ளை உள்ளத்
    தண்டாமரைக்குத் தகாது கொலோ சகம் ஏழும் அளித்து
    உண்டான் உறங்க வொழித்தான் பித்தாக உண்டாக்கும் வண்ணம்
    கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே.

துர்க்கை ஸ்துதி

  1. ஸர்வமங்கலமாங்கல்யே சிவே ஸர்வார்தஸாதிகே
    சரண்யே த்ர்யம்பகே கௌரி நாராயணி நமோஸ்து தே

சனீஸ்வரர் ஸ்துதி

  1. நீலாஞ்சன ஸமாபாஸம் ரவிபுத்ரம் யமாக்ரஜம்
    சாயா மார்த்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி ஸனைச்சரம்

சண்டிகேஸ்வரர் ஸ்துதி

  1. ஓம் த்வாரஸ்திதாய வித்மஹே
    சிவபக்தாய தீமஹி
    தன்னோ சண்டஹ் ப்ரசோதயாத்

நவகிரக ஸ்துதி

  1. ஓம் ஆதித்யாய ச சோமாய மங்களாய புதாய ச
    குரு சுக்ர சனிப்யஷ்ச ராஹவே கேதவே நம:

சந்திர பகவான் ஸ்துதி

  1. ததி சங்கு துஷாராபம் க்ஷீரோதார்ணவ சம்பவம்
    நமாமி ஷாசினம் சோமம் ஷம்போர்மஸ்குட பூஷணம்

பைரவர் ஸ்துதி

  1. விரித்த பல்கதிர் கொள் சூலம், வெடிபடு தமருகம், கை
    தரித்து ஓர் கோல கால பயிரவன் ஆகி, வேழம்
    உரித்து, உமை அஞ்சக் கண்டு, ஒண் திரு மணிவாய் விள்ளச்
    சிரித்து, அருள் செய்தார்-சேறைச் செந்நெறிச் செல்வனாரே

அம்பாள் ஸ்துதி

  1. தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா
    மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
    இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
    கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே
  2. நாயகி நான்முகி நாராயணி கை நளினபஞ்ச
    சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதிநச்சு
    வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கியென்று
    ஆயகி ஆதி உடையாள் சரணம் அரண் நமக்கே
  3. குழையைத் தழுவிய கொன்றையற் தார்கமழ் கொங்கைவல்லி
    கழையைப் பொருத திருநெடுந்தோளும் கருப்புவில்லும்
    விழையப் பொருதிறல் வேரியம் பாணமும் வெண் நகையும்
    உழையைப் பொருகண்ணும் நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே
சிவன் கோவில்களில் அனைத்து தெய்வங்களுக்கும் சொல்ல மந்திரங்கள்
Scroll to top